Pages

Saturday, March 17, 2012

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.......

இன்றைய தலைமுறை யுவன்/யுவதிகளுக்கு FAST FOOD கலாசாரம் தொற்றி கொண்டு விட்டது.


தமிழ்நாடு  பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.




தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை என் அனுபத்தில் எழுதி இருக்கிறான்.


இனிப்பு வகைகள்..............



  • ஆம்பூர் மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.
  • காரைக்கால் குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைபாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
  • திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வடஇந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.
  • தூத்துக்குடி மக்ரூன் தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.
  • பாலவாநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
  • வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம்,நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா.


  • அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
  • காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
  • மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி

மரபு சார்ந்த சமையல் வகைகள்...............

  • அய்யங்கார் சமையல்
  • ஆந்திரா சமையல்
  • இஸ்லாமிய சமையல்
  • உடுப்பி சமையல்
  • கொங்கு சமையல்
  • செட்டிநாடு சமையல்
  • சேலம் சமையல்
  • தஞ்சாவூர் சமையல்
  • மதுரை சமையல்
  • மலபார் சமையல்
  • விருதுநகர் சமையல்

சாப்பாடு..............

  • ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
  • காரைக்குடி உப்புக்கண்டம் : உணவு ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
  • சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
  • பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
  • புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
  • இராமேஸ்வரம் மாசிக்கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
  • பரமத்தி வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
  • கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
  • மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
  • மதுரை இட்லி : சைவ சிற்றுண்டி
  • விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
  • திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு

மேலை குறிப்பிட்டவை சில...... இன்னும் தெரிந்த ஊர்களின் தெரியாத உணவு வகைகள் நிறைய இருக்கின்றது...... will continue in searching it........





Note :என்னுடைய அடுத்த பதிவில்..... எனக்கு தெரிந்த ஊர்களின் பிரபலமான உணவு விடுதி (Restaurants) பதியவிருகிறான்...........







No comments:

Post a Comment