Pages

Monday, February 27, 2012

Thaman's PHOTO COPY songs.......some samples..



The Upcoming Music director Thaman,has no time to think so........ Some of his latest hits are from very OLD WINE...... here are some sample.....

SONG1:

SONG 2:

Wednesday, February 22, 2012

Book I prefer to read காவல்கோட்டம் – சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல் (Kaaval Kottam Novel - Sahithya Academy winner)


* காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.

* மதுரை நகரின், மதுரை அரசின், தென்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறுகிறது.

* விஜயநகர, பிரிட்டிஷ் பேரரசுகளின் விரிவாக்கம், ஆட்சிமுறைகளை விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கிறது.

* பத்தாண்டு காலக் கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளை இணைக்கிறது.

* வரலாற்றுப் போர்வையால் மறைக்கப்பட்டுவிட்ட முந்தைய வாழ்வியல் செய்திகளைப் பார்வைக்கு வைக்கிறது.

* இதுவரை சொல்லப்படாத வரலாற்றுச் செய்திகள் சிலவும் வெளிச்சமிடப்படுகின்றன.

* 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென்னிந்திய மண்ணில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களையும் அதிகார மாற்றங்களையும் விவரிக்கிறது.

* நாவலின் முதல் பாகத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட கற்பனையாக அன்றி வரலாற்றிலிருந்தே விரிக்கப்பட்டுள்ளன.

* காலந்தோறும் மாறிவருகிற நாட்டு நிர்வாகத்தையும் நீதிமுறையையும் படம்பிடிக்கிறது.

* காலனி ஆட்சியின் மாற்றாந்தாய்ப் போக்குகளை ஆதாரங்களுடன் சுட்டுகிறது.

* ஐரோப்பிய பாணிக் கல்வி, ரயில், மெட்டல் சாலைகள், காட்டன் மில், நவீன தொழில்நுட்பங்களின் வருகையை விரிவாகக் கூறுகிறது.

* முல்லைப் பெரியாறு அணைக்கான திட்டமிடல், கட்டுமானம், பாசனப்பரப்பு உருவாக்கம், வைகை வடகரை மக்களின் புதிய வேளாண் செழிப்பைக் கொண்டாடுகிறது.

* பழைய காவல்முறையை ஒழித்து அதன் புதைகுழியின்மேல் புதிய காவல்துறை உருவான கதை, இதனைத் தொடர்ந்து வந்த குற்றப் பரம்பரைச் சட்டம், காலனி அரசின் அடக்குமுறை ஆகியவற்றை ஆதாரப்படுத்துகிறது.

* காலங்களினூடாக விரிவாக்கப்படுகிற மீனாட்சி கோவில், மதுரையின் வளர்சிதை மாற்றங்கள் அழகாகக் காட்சிப்படுகின்றன.

* இனவரைவியல் பார்வையில் சமூகப்போக்குகளை விளக்குகிறது.

* இடையூறுகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் நடுவில் வாழ்க்கையைக் கொண்டாடும் கோலங்களை நகைச்சுவை தொனிக்கச் சொல்கிறது.

* தமிழ்ச்சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையக்கூடாமல் ஒதுக்கப்பட்டு களவுக்குத் தள்ளப்பட்ட ஒரு இனக்குழுவின் வாழ்வியலை உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது.

* இருபெரும் பஞ்சங்கள், வெள்ளம், கொள்ளை நோய்களால் நிகழ்ந்த பேரழிவுகளை மனம் பதைக்கப் புலம்புகிறது.

* பெருமத குல தெய்வ வழிபாடு விழாக்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளை விரிவாகக் கூறிச் செல்கிறது.