Ramesh Duraisamy's Blog
இரமேசு துரைசாமி வலைபதிவு (படித்தவை, பார்த்தவை,கேட்டவை)
Saturday, November 16, 2013
Friday, November 8, 2013
Tuesday, December 4, 2012
படித்ததில் பிடித்தது - ரீவைண்ட் ராகம்!
படித்ததில் பிடித்தது - ரீவைண்ட் ராகம்!
|
![]()
எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் நம்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அது நமக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ அமைகிறது.
மாட்டு வண்டிகள் இருந்த காலத்தில் அதில் பயணித்த அனுபவத்திற்கும், இப்போது பல்சரில் (Pulzar) பறக்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. எனினும் அந்த பழைய மாட்டு வண்டியில் பயணித்த நாட்களை நினைக்கும் போது மனதில் எழும் பசுமையான நினைவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். இதனால் பல்சர் பைக்கே தேவையில்லை என்பது இல்லை. பழைய தொழில்நுட்பங்களில் இருக்கும் (இருந்த ?! ) மகிழ்ச்சியை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நமக்கு நினைத்த நேரத்தில் பாடல்கள் கேட்க வேண்டும் எனில் கையில் இருக்கும் செல்போன் மட்டுமே இன்றைய காலத்தில் போதுமானதாக இருக்கிறது. எஃப்.எம்., மெமரி கார்டு மூலம் நினைத்த வேளையில் பாடல்களைக் கேட்கிறோம். இல்லையெனில் இணையத்தின் வாயிலாகவும், யூ-டியூப் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமும் நமக்கு தேவையான பாடல்களை கேட்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகிறது. டூவீலர் ஓட்டும் போதும், பேருந்து பயணத்தின் போதும் ஹெட்-போன்களை காதில் சொருகியபடி பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிக்கிறோம். சற்று முன் நோக்கிச் சென்றால் சிடியில் நமக்கு பிடித்த பாடல்களை பதிந்து வீட்டில் அதிகப்படியான சத்தத்தில் வைத்து கேட்போம். அதற்கு முன்பு டேப்-ரெக்கார்டரில் பாடல்களை பதிந்து கேட்டுக் கொண்டிருந்தோம். எனக்கு தெரிந்து சில குடும்பங்களில் எந்தெந்த பாடல்களை கேசட்களில் பதிவு செய்வதற்கு பல சண்டைகள் நடக்கும். அண்ணன் ரஜினி ரசிகனாக இருப்பான். தம்பி கமல் ரசிகனாக இருப்பான். அப்பாவோ சிவாஜி காலத்து பாடல்கள் வேண்டும் என அடம்பிடிப்பார். ஒரு கேசட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆசையும் நிறைவேறும். 'எஜமான்' படத்திலிருந்து ஒரு பாடல் பதிவு செய்ய முடிவு செய்தால், அண்ணன் 'ராக்கு முத்து ராக்கு'க்கு டிக் அடிக்க, தம்பி 'எஜமான் காலடி மண்ணெடுக்க' அடம்பிடிப்பான்.ஒவ்வோரு படத்திலும் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து கொடுக்க, அதில் அப்பா கடைசியாக முன் பக்கம் ஆறு பாடல்கள், பின் பக்கம் ஆறு பாடல்கள் என இறுதி செய்து பாடல்களை பதிவு செய்ய கேசட் கடையில் கொண்டு கொடுப்பார்.
கடைக்காரர் வெயிட்டிங்கில் வைத்து, ஒரு வாரம் கழித்து வர சொல்வார். சொன்ன தேதியில் அப்பா சென்று கேசட்டை வாங்கி வந்து வீட்டில் போடும் போது, நமக்கு பிடித்த பாடல் எப்போது வருமென ஆர்வமாக கேட்பதுண்டு. இன்றும் அந்த பாடல்களை எங்காவது கேட்கும் போது கேசட்டில் இருந்தபடி அந்த பாடலுக்கு அடுத்து வரும் பாடலின் தொடக்கம் வாயில் முணுமுணுக்க வைக்கிறது.
இளைஞர்கள் இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பல கலாட்டாக்கள் அரங்கேறும். ஸ்பீக்கர்களை வாங்கி அதை மண் பானையில் வைத்தால் சத்தம் அதிகமாக கேட்கும் என்பதால் மண் பானைக்குள் வைத்து பாடல்களை அலறவிடுவார்கள். அந்த பக்கம் "ஏண்டா ஸ்பீக்கரை போட்டு இப்படி காதை காலி பண்றீங்க" என்ற அம்மாவின் ஏச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளாமல் ' ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்' என்று எதிர்வீட்டுப் பெண்ணுக்கு 'பாடல் விடு தூது' அரங்கேறும் கதைகளும் உண்டு. எதிர்வீட்டுப் பெண் மறுத்து, காதல் தோல்வியில் முடிந்தால் ''போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே'' என சோக கீதங்கள் வீட்டை ஆட்கொள்ளும். அந்த காலங்கள் கடந்து வேலை, பொறுப்பு என வெளி ஊருக்கு சென்ற பின் அதே அம்மா அந்த ஸ்பீக்கரை பார்த்து ஏக்கம் கொள்வதும் பல வீடுகளில் நடந்திருக்கும். 'முதல்வன்' படத்தில் அர்ஜூன் சொல்வது போல் வாழ்க்கையில் 'ரீவைண்ட்' பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இல்லையா? |
Saturday, September 1, 2012
நான் இரசித்த நடிகர்கள் - தேங்காய் சீனிவாசன்
நான் இரசித்த நடிகர்கள் - தேங்காய் சீனிவாசன்
நாற்பது வயதானாலே நாய்க்குணம் ஆண்களுக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள்.
இந்த நாய்க்குணம் என்பது வீட்டைக் காவல்காக்கும் என்ற அர்த்தத்தில்.
படியவாரிய தலைமுடி,கைவைத்த பனியன்,நறுக்கிய மீசை,கலரில்லாத உடை
என தங்கள் கேரக்டரையே பெரும்பாலான ஆண்கள் இந்த வயதில் மாற்றிக்கொள்வார்கள்.
இந்த வளர்சிதை மாற்றம் சிலருக்கு, தன் பெண்ணை ஒருவன் சைட்டடிக்கத்
தொடங்கிய பின்னரோ அல்லது தன் மகன் செகண்ட் ஷோ தனியாகப் போக
ஆரம்பித்தவுடனோவும் வரப்பெறும்.
ஆனால் சிலர் மட்டும் இந்த மாற்றம் வாய்க்கப்பெறாமல் காலம் முழுவதும் மைனராகவே
திரிவார்கள். மகள் கல்யாணத்திற்க்கு முதல் நாள் கூட மேட்னி ஷோ சினிமா போவார்கள்.
பளபள ஷேவ், மடிப்பு கலையாத ஆடை, பெண்களைக் கண்டால் அலைபாயும் கண்கள் என
தங்கள் சுயத்தை விடாமல் இருப்பார்கள். தெருவிற்கு ஒன்றிரண்டு பேர் இப்படி நிச்சயம் இருப்பார்கள்.
இம்மாதிரி ஆட்களை வெள்ளித்திரையில் அட்டகாசமாக பிரதிபலித்த நடிகர், 70களிலும் 80களிலும் தமிழ் சினிமாவைக் கலக்கிய மறைந்த தேங்காய் சீனிவாசன்.
சித்தூர் சீனிவாசன் என்ற இயற்பெயருடன் சினிமாவுக்கு வந்தவர்,
தான் ஏற்று நடித்த தேங்காய் என்னும் கேரக்டரின் மூலம் தேங்காய் சீனிவாசனானார்.நடிக்க வரும் பெரும்பாலானோர் நாயகன் ஆகும் கனவுடனேயே திரையுலகுக்கு வருவார்கள். ஆனால் காமெடியன் ஆகும் எண்ணத்துடனே சீனிவாசன் சென்னை வந்தார் என நாம் கொள்ளலாம். ஏனென்றால் அவர் சென்னைக்கு வந்து முதலில் சந்தித்ததே காலத்தை வென்ற காமெடியன் சந்திரபாபுவைத்தான். ஒரு தெய்வத்தைப் பார்க்கும் மனநிலையுடன் சந்திரபாபுவை சீனிவாசன் பார்த்தாரென ஒரு கட்டுரையில் அருள்
எழிலன் குறிப்பிட்டுள்ளார்.
காமெடியன், கேரக்டர் ஆர்டிஸ்ட், வில்லன், கதாநாயகன், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரையில் அவர் எடுத்து இருந்தாலும் அவரின் பிம்பமாக நம்மிடம் எஞ்சியிருப்பது காமெடியன் வேடமும், நாற்பதுகளின் மைனர் வேடமும்தான்.
இந்த மைனர் வேடத்தை இவருக்கு முன்னாலும் பின்னாலும் காட்சிப்படுத்தியவர்கள் மிகக் குறைவு. டிக் டிக் டிக் படத்தில் போட்டோ ஸ்டுடியோ ஓனராக வந்து, தன் தொழிலாளி கமலுக்கு கால் கேர்ள்கள் அட்ரஸைக் கொடுத்து டென்சனை குறைத்துக் கொள்ளச் சொல்வார். அப்போது அந்த சுகத்தை அவர் வர்ணிப்பது இப்போதைய டெலிபோன் செக்ஸ் அழைப்புகளுக்கு முன்னோடி எனச் சொல்லலாம்.
தென்றலே என்னைத் தொடு வில் மோகனின் மேனேஜராக, சனிக்கிழமையானால் கால்கேர்ள்களிடம் கட்டாயம் செல்ல வேண்டுமென துடிக்கும் நடுத்தர வயது வேடம். தேங்காய்க்குத்தான் அது அல்வாவாயிற்றே. மாட்டிக்கொள்ளாமல் அதைச் செய்வதும், தன் மனைவி காந்திமதியை ஏமாற்றுவதுமாய் மனுஷன் பின்னியிருப்பார்.
தங்கமகனில் ரஜினிக்கு தந்தையாக ஆனால், வில்லன் வேடம். வில்லனாக இருந்தாலும் சாண்ட்விச் மசாஜை பற்றி ஒரு வசனமும் உண்டு. வீரப்பா,நம்பியார் காலம் முதல் இப்போதைய கிஷோர், சம்பத் காலம் வரை எல்லோருக்கும் வில்லனைப் பார்த்தாலே பயம் வரும்படியாகத்தான் காட்சிகள் அமைப்பார்கள். ஆனால் இதில் தேங்காய் மட்டும் விதிவிலக்கு. வில்லனாக இருந்தாலும் அவருக்கு வசனங்களிலும்
நடவடிக்கைகளிலும் ஒரு கிளுகிளுப்பு சாயத்தைப் பூசிவிடுவார்கள்.
இதனால் காக்கிச்சட்டை படத்தில் கூட சைடு வில்லனாக இருந்தாலும், கஞ்சா கடத்துதலும், விபச்சாரமுமே இவரது தொழிலாக சித்தரித்திருப்பார்கள்.
இவர் நாயகனாக நடித்த நான் குடித்துக் கொண்டேயிருப்பேனில் (தலைப்பிலேயே) கூட குடியால் கெடும் வேடமே.
ஆனால் தேங்காயின் லேண்ட் மார்க் படங்களாக கருதப்படும் காசேதான் கடவுளடா படத்திலும், தில்லு முல்லு படத்திலும் ஒன்றுக்கொன்று முரணான கேரக்டர்கள், முக்கியமாக அவரது டிரேட் மார்க் இல்லாத கேரக்டர்கள். காசேதான் கடவுளடா படத்தில் சென்னை பாஷை பேசும் டீக்கடை உரிமையாளர் நண்பர்களுக்காக போலி சாமியார் வேடத்தில் நடித்து ஏமாற்றும் கேரக்டர். தில்லுமுல்லில் கம்பெனி உரிமையாளர் தன் பணியாளரிடம் ஏமாறும் கேரக்டர்.
வானவில்லின் இரண்டு எதிரெதிர் முனைகளின் நிறங்களைப் போன்ற வேறுபாடான கேரக்டர்கள். இரண்டிலும் மிளிர்ந்தவர் தேங்காய்.
தேங்காய் சீனிவாசனின் இன்னொரு தனித்தன்மை அவரது வேறுபாடான வசன உச்சரிப்புகள். மாடுலேஷன் எல்லோரும் செய்வதுதான் என்றாலும் பச்சக், கிச்சக்,ஜலாபத்ரி என ஏராளமான தமிழில் நாம் கேட்டறியாத சொற்களைத் திரையில் ஒலிக்கச் செய்தவர் தேங்காய்தான். இவரது மறைவும், சின்னி ஜெயந்தின் வருகையும் சமகாலத்தில் நிகழ்ந்தது. இவர் விட்டுச் சென்ற ஜில்பான்ஸி, கில்போத்ரி பாணி சொற்களை சின்னி தத்தெடுத்துக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் சிவாஜியுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், பின்னர் எம்ஜியாருடன் நெருக்கமானார். ஆனால் அதன் பின் சிவாஜியை நாயகனாக வைத்து கண்ணன் வந்தான் படத்தை தயாரித்தார். கமல்ஹாசனுடன் பல படங்கள் செய்திருந்தாலும், ஒப்பீட்டளவில் இவர் ரஜினிகாந்துடந்தான் அதிக படங்கள் செய்துள்ளார்.
பில்லா,கழுகு,தங்கமகன்,தாய்வீடு, நான் சிகப்பு மனிதன் என ஏராளமான படங்களில் ரஜினியுடன் வித விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.
அவர் மறைந்து 20 வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு அவர் அகலப் போவது எப்போதுமில்லை.

Article from - http://muralikkannan.blogspot.in/
Sunday, July 22, 2012
Saturday, March 17, 2012
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.......
இன்றைய தலைமுறை யுவன்/யுவதிகளுக்கு FAST FOOD கலாசாரம் தொற்றி கொண்டு விட்டது.
தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை என் அனுபத்தில் எழுதி இருக்கிறான்.
இனிப்பு வகைகள்..............
மரபு சார்ந்த சமையல் வகைகள்...............

- ஆம்பூர் மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.
- காரைக்கால் குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைபாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வடஇந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.
- தூத்துக்குடி மக்ரூன் தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.
- பாலவாநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
- வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம்,நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.
- ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா.
- அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
- ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
- கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
- காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
- மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
மரபு சார்ந்த சமையல் வகைகள்...............
- அய்யங்கார் சமையல்
- ஆந்திரா சமையல்
- இஸ்லாமிய சமையல்
- உடுப்பி சமையல்
- கொங்கு சமையல்
- செட்டிநாடு சமையல்
- சேலம் சமையல்
- தஞ்சாவூர் சமையல்
- மதுரை சமையல்
- மலபார் சமையல்
- விருதுநகர் சமையல்
சாப்பாடு..............
- ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
- காரைக்குடி உப்புக்கண்டம் : உணவு ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
- சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
- பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
- புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
- இராமேஸ்வரம் மாசிக்கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
- பரமத்தி வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
- கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
- மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
- மதுரை இட்லி : சைவ சிற்றுண்டி
- விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
- திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு
மேலை குறிப்பிட்டவை சில...... இன்னும் தெரிந்த ஊர்களின் தெரியாத உணவு வகைகள் நிறைய இருக்கின்றது...... will continue in searching it........
Note :என்னுடைய அடுத்த பதிவில்..... எனக்கு தெரிந்த ஊர்களின் பிரபலமான உணவு விடுதி (Restaurants) பதியவிருகிறான்...........
Monday, February 27, 2012
Thaman's PHOTO COPY songs.......some samples..
The Upcoming Music director Thaman,has no time to think so........ Some of his latest hits are from very OLD WINE...... here are some sample.....
SONG1:
SONG 2:
Subscribe to:
Posts (Atom)

.jpg)
அண்ணன் ரஜினி ரசிகனாக இருப்பான். தம்பி கமல் ரசிகனாக இருப்பான். அப்பாவோ சிவாஜி காலத்து பாடல்கள் வேண்டும் என அடம்பிடிப்பார். ஒரு கேசட்டில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆசையும் நிறைவேறும். 'எஜமான்' படத்திலிருந்து ஒரு பாடல் பதிவு செய்ய முடிவு செய்தால், அண்ணன் 'ராக்கு முத்து ராக்கு'க்கு டிக் அடிக்க, தம்பி 'எஜமான் காலடி மண்ணெடுக்க' அடம்பிடிப்பான்.